ஓட்டமாவடி தாருல் உலூம் மாணவி றைஹா ஸைனப் தேசியத்தில் சாதனை
கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய மாணவி முகம்மது முஸ்னி றைஹா ஸைனப் தேசியப் போட்டியில் மூன்றாமிடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.பைஸல் தெரிவித்தார்.
இவர், உலக நீர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் கனிஷ்டப் பிரிவில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
இவருக்கான, பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி பிரதமர் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
தேசியத்தில் சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)