கிராண்ட்பாஸில் வெட்டிக் கொல்லப்பட்ட இரு சகோதரர்கள்
கிராண்ட்பாஸ் – கலநிதிசகம பகுதியில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.