பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை; ஜனாதிபதி குழு , இருநாள் விவாதம்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி, தேவையான ஆலோசனைகளைப் பெறவும் ஜனாதிபதி குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (14) பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பித்ததன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக பொருத்தமான நேரத்தில் பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த அறிக்கை மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டு எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.