திருமலையில் இரு பெண்கள் வெட்டிக் கொலை; கொலையாளிகளைத் தேடி தீவிர விசாரணை
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும், இதன் போது 15வயதான சிறுமி வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
74 மற்றும் 68 வயதான இரு பெண்களே சடலமான மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண் ஒருவரின் 15 வயதான மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.