புத்தளம் மாவட்டத்தில் 04 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப் பணம் செலுத்தியது
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மாநகர சபை, கற்பிட்டி பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை ஆகிய 04 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மரச் சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் புத்தளம் மாநகர சபை தேர்தலில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ரணீஸ் பதூர்தீன் புத்தளம் மாவட்ட செயலகத்தில் இதற்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.
நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் மிகவும் பலம் வாய்ந்த அணியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணி அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)