புத்தளம் மாவட்டத்தில் இதுவரை இரண்டு அரசியல் கட்சிகள், ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தல்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் கடந்த 03 ம் திகதி முதல் எதிர்வரும் 19 ம் திகதி வரை செலுத்துவதற்கும் வேட்பு மனுக்கள் 17 ம் திகதி தொடக்கம் 20 ம் திகதி நண்பகல் 12 வரை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறான நிலையில் புத்தளம் மாவட்டத்தில் 10 ம் திகதி பிற்பகல் 4 மணிவரையான காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி 07. உள்ளூராட்சி சபைகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 04 உள்ளூராட்சி சபைகளுக்கும் என இரண்டு அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் 09 சுயேட்சைக் குழுக்கள் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவட்சி திணைக்களம் அறிவித்துள்ளது.
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)