தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புதல்
மூன்று வருடங்களாக நீடித்து வரும் ரஷ்யாவுடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உக்ரைன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சவூதியின் ஜித்தா நகரில் இடம்பெற்று அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையின் போது 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்துவதற்கு உக்ரைன் சம்மதித்துள்ளது உக்ரைன் போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உக்ரைன் சம்மதித்ததையடுத்து அந் நாட்டுக்கான இராணுவ மற்றும் உளவுத் தகவல்களை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.