பெண் டாக்டர் துஷ்பிரயோகம்; தொலைபேசி சமிக்ஞைகளை பின்தொடர்ந்து காமுகனைக் கைது செய்த பொலிசார்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கல்நேவ பகுதியில் வைத்து (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்காக 05 பொலிஸ் குழுக்கள் மற்றும் 45 விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இது இடம்பெற்றுள்ளது.கிரிபண்டலாகே சதுரங்க ரத்நாயக்க என்ற 34 வயதுடைய சந்தேக நபர் கல்நேவ புதிய நகர் பகுதியைச் சேர்ந்தவராவார்.
குறித்த வைத்தியரை பலாத்காரம் செய்த பின்னர் சந்தேக நபர் அவரது இரண்டு கைத்தொலைபேசிகளில் ஒன்றைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
வைத்தியருக்கு சொந்தமான கையடக்கத் தொலைபேசி உள்நுழைவு வாழ்க்கைத்தகவல் மூலம் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியுடன் இணைக்கப் பட்டதால் சந்தேக நபரின் தொலைபேசியின் சமிக்ஞைகளை பின்பற்றிய பொலிசார் சந்தேக நபரை கல்நேவ பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
கெக்கிராவ பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டமை தொடர்பிலும் சந்தேக நபருக்கு எதிராக கெக்கிராவ நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து கடந்த (10) விடுவிக்கப்பட்டவர் என பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சில காலம் சீவரதாரியாகவும் இருந்ததற்கான இவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனரா என்பது குறித்தும் பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராக கடமையாற்றும் 32 வயதான இவர் (10) இரவு உணவு அருந்துவதற்கு வைத்தியசாலை வளாகத்திலுள்ள தனது அறைக்கு சென்றுள்ளார்.
குறித்த இடத்திற்கு வந்த சந்தேக நபர் கூரிய ஆயுதத்தை காட்டி வைத்தியரை பயமுறுத்தி கோலை மிரட்டல் விடுத்து இந்த குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)