முஸ்லிம் மீடியா போரம், ஈரான் கலாச்சார நிலையம் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் , ஈரான் கலாச்சார நிலையமும் இணைந்து 3வது ஆண்டாகவும் சர்வதேச மகளிர் தினத்தினை 10.03.2025 கொழும்பில் உள்ள ஈரான் கலாச்சார நிலையத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது முன்னாள் ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் புர்கான் பீ. இப்திகார் அகல் விளக்கு என்னும் நூல் வெளியீடு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஈரான் கலாச்சார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி மொசாமி குட்ரைஸ், பிரதம பேச்சாளர் ஆலிமா வைத்தியர் மரீனா தாஹா ரிபாய் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் அத்துடன் ; ஈரான் நாட்டின் குடும்ப பெண்கள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கலாநிதி செயினப் ரெஸ்டிகார் பனாஹ் சூம் வழியாக ஈரானில் இருந்து உரையாற்றினார். நூலின் முதல் பிரதியை ஹாஜியானி சஹரியா பஹார்டீன் மற்றும் பலரும் பெற்றுக் கொண்டனர்
இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்தியர் மரினா றிபாய்- இந்த உலகில் வாழும் சகலருக்கும் சிறந்த வாழ்க்கை முறை பெண்களுக்கான சீரான வாழ்க்கை முறை அவர்கள் கலை, கலாச்சாரம் திருமணம், போன்ற சகலத்துக்கும் அல் குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டி உள்ளது. சகல மொழிகளிலும் குர்ஆன் மொழிபெயர்ப்பு சகல நாடுகளிலும் உள்ளன அவை பெற்று வாசித்து இஸ்லாமிய அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
உலகில் 115 வருடங்களாக உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1909 ல் முதன் முதலாக பெண்கள் தினம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் இஸ்லாம் மதம் பெண்களுக்கான சகல உரிமைகளையும் 1450 வருடங்களுக்கு முன்பே வழங்கியுள்ளது. ஆண்களை விட 12 உரிமைகளை மேலதிகமாக பெண்களுக்கு வழங்கியுள்ளது. அவர்களுக்கு கல்வி உரிமை, திருமண உரிமை, தொழில் செய்யும், உரிமை, போன்ற பல உரிமைகள் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. அத்துடன் ஆண் தமது பெண், குழந்தைகள் தாய், சகோதரிகளை கண்காணிப்பதும் கடமையாகும்.. பலவந்தமாக பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. எனவும் உரையாற்றினார்.













(அஷ்ரப் ஏ சமத்)