மலையக முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு கால்கள் இல்லையா
முந்நூறுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு பாதணிகள் வாங்குவதற்காக அரசாங்கம் ரூபாய் 3500 பெறுமதியான வவுச்சர்களை கோட்ட கல்வி காரியாலயத்தினூடாக பாடசாலைகளுக்கு வழங்கி வைத்துள்ளது.
இதில் முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கும் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்களுக்கும் வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது நல்ல விடயம் எனினும், பெருந்தோட்ட மாணவர்கள்,முஸ்லிம் மாணவர்களும் இரண்டறக் கலந்து கல்வி கற்கும் மலையகத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் முற்றாக புறக்கணிக்கப் பட்டுள்ளமையானது பெற்றோர்கள், புத்தி ஜீவிகள், மதத் தலைவர்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என்ன கால்கள் இல்லாதவர்களா? அல்லது அவர்கள் சப்பாத்து போடத் தேவையில்லையா என்று சம்பந்தப்பட்டவர்கள் எண்ணுகிறார்களோ தெரியவில்லை.