நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தரவு
ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தத் தவறியதற்காக, ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.