நபியை பின்தள்ளி முதல்முறையாய் முதலிடம் பிடித்தார் ஓமர்ஷாய்
சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலுக்கு அமைய ஒருநாள் போட்டிகளின் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் சக நாட்டு வீரர் முஹமது நபியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் வலது கை மித வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான அஸ்மதுல்லா ஓமர்ஷாய்.
சம்பியன் கிண்ண தொடர் நிறைவுக்கு வந்த நிலையில் ஐசிசி புதிய தரவரிசையை நேற்று வெளியிட்டது. அந்தவகையில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான சகலதுறை யில் முதல் முறையாக முதலிடம் பிடித்த அஸ்மத்துல்லாஹ் ஓமர்ஷாய் துடுப்பாட வீரர்களாக்கான தரவரிசையிலும் 12 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.