தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு
புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு நளீர் பௌன்டேசன் அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க அமேரிக்க சக்காத் பௌன்டேசன் அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட 50 பயணாளிகளுக்கு உலருணவு பொதிகள் இன்று (09)வழங்கி வைக்கப்பட்டது.
நளீர் பௌன்டேசன் அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.ஏ.நளீரின் அயராத முயற்சியினால் அமேரிக்க சக்காத் பௌன்டேசனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க தெரிவு செய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகள் பகிர்தளிக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேசத்தில் இன, மதம் பாராமல் பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை பல வருடங்களாக நளீர் பௌன்டேசன் அமைப்பு செய்து வருகின்றது. இதனடிப்படையில் இவ்வுதவித்திட்டம் கொண்டுவரப்பட்டு சாளம்பைக்கேணி-01,02,03,04 ஆகிய பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் மேலும் சில பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் இவ்வுதவி திட்டம் வழங்கவுள்ளதாக அதன் தலைவர் எம்.ஏ.நளீர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இப்தார் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 100க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







(ஏ.எச்.எம்.ஹாரீஸ்-மத்திய முகாம்)