கற்பிட்டியில் பெண்களுக்கான இலவச சுயதொழில் பயிற்சி நெறி ஆரம்பம்
கற்பிட்டியில் பெண்களுக்கான இலவச ஒரு வருட சுயதொழில் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு கற்பிட்டி செடோ நெனசல காரியாலயத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ஜீ எஸ்.ஏ அபேறுவான் தலைமையில் இடம்பெற்றது
வடமேல் மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் கற்பிட்டி செடோ நெனசலவின் ஏற்பாட்டில் இடம்பெற உள்ள பெண்களுக்கான ஒரு வருட இவ் இலவச சுயதொழில் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு கற்பிட்டி பிரதேச பெண்கள் அபிவிருத்திச் உத்தியோகத்தர் ஜே.பீ சாந்திலதா, மாகாண பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வாயிஷா, இளைஞர் விவகார பொறுப்பதிகாரியும் செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான ஏ.ஆர் முனாஸ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் எஸ் நிஸ்வர், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் சமாதானம் தொடர்பான உத்தியோகத்தர் திருமதி டிஸ்னா மற்றும் கற்பிட்டி பிரதேசத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சிகளை முதன் முதலாக ஆரம்பித்து தொடர்ந்து செயற்பட்டு வரும் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.கே ஆப்தீன் (அலாவுதீன்) ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது
இப் பயிற்சி நெறியின் முதலாவது பயிற்சி வகுப்பு புதன்கிழமை (12) ஆரம்பிக்கபடுவதுடன் இப் பயிற்சி நெறியில் 22 வகையான உற்பத்திகள் பற்றிய பயிற்சி இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்