மே முதல் வாரத்தில் உள்ளூராட்சி தேர்தல்
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே மாத முதல் வாரத்தில் நடைபெறலாம் என தேர்தல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தெஹியத்தகண்டி, மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபை மற்றும் காலி மாவட்டத்தில் கல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இம்முறை நடைபெறவிருக்கின்றது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் தேர்தல் ஆணைக்குழு மும்முரமாக ஏற்று வருகின்றது. இன்று சனி அன்றும் தேர்தல் மாவட்ட அரசாங்க அதிபர்களை அழைத்து தேர்தல் ஆணைக்குழு தேர்தலை சீராக நடத்துவது பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்தியது. உள்ளூராட்சி தேர்தலுக்கான நியமன பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி முடிந்ததும் நியமன பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 12-ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். அது ஒருபோதும் நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. இதே நேரம் தேர்தல் கட்சிகள் மும்முரமாக நியமன பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
பொது ஜன பெரமுன முதன்முறையாக களுத்துறை மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.