கற்பிட்டியில் பெண் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆரம்பம்
கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெண்களினால் முன்னெடுக்கப்படும் உற்பத்தி பொருட்கள் மற்றும் விற்பனைகளை மேம்படுத்தும் நோக்கோடு கற்பிட்டியில் பெண் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் என்ற அமைப்பு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்திலதா தலைமையில் மகளிர் தினத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் சமூக வலுவூட்டல் அமைச்சின் புத்தளம் மாவட்ட உளவளதுனை இணைப்பாளர் எச்.எம் நிப்ராஸ், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை பொறுப்பதிகாரி ஏ.ஆர் முனாஸ், கலாச்சார உத்தியோகத்தர் எஸ் ஏ.எஸ் சமரசிங்க, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு பாசில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சபீர், அனார்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சிபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்
பெண் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் ஊடாக பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்க்கும் அவர்களின் உற்பத்திப் பொருட்களை தரம் மிக்கதாகவும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்க்கும்முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)