கணித ஒலிம்பியாட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மாணவிகள் சாதனை
நடைபெற்று முடிந்த வலய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.
கணித ஒலிம்பியாட் தொகுதி ஒன்றில் எம்.ஆர்.எப்.அலீனா, பி.நுஸ்ரத் அயானா ஆகிய மாணவிகளும் தொகுதி இரண்டில் என்.ஏ.எச்.அக்ஸா, எம்.ஏ.அம்னா ஸாரா ஆகிய மாணவிகளும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் மாணவிகளை தயார்படுத்தி, பயிற்சியளித்த ஆசிரியர்களான கே.ஆர்.எம்.இர்ஷாத், எம்.எல்.எம்.முஸம்மில் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)