கொழும்பில் இந்திய தூதரகம் சார்பில் ரமளான் இஃப்தார் நிகழ்வு
கொழும்பில் இந்திய தூதரகம் சார்பில் ரமளான் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஏற்பாட்டில் 04.03.2025 செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு கோள்ஃபேஸ் ஹோட்டலில் சிறப்பு ரமளான் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டிருந்த மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களை இலங்கைக்கான இந்திய தூதர்
சந்தோஷ் ஜா வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் சந்தோஷ் ஜா, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோர் பேசுகையில் இந்திய அரசு இலங்கைக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதற்கு இலங்கை அரசு மூலமாக நன்றிகள் தெரிவித்து பேசினார்கள்.
இந்த விழாவில் தேசிய ஒருமைப்பாட்டு இணை அமைச்சர் அமைச்சர் முனீர் முலாபர், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா தலைவர் மௌலவி ரிஸ்வி முப்தி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், நிசாம் காரியப்பா, எம். எஸ். உதுமான் லெப்பை, எம். எஸ். நளீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சரத் பொன்சேகா, பைசல் காசிம், அலி ஷாகிர் மௌலானா, மவ்லவி ஹாபிஸ் நசீர், பாராளுமன்ற உறுப்பினர்கள் பௌசி, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், எம். ஏ. எம். தாஹிர், எஸ். எம். மரிக்கார், முஹம்மது பைசல், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி, அகில இலங்கை
மலேசியா, துருக்கி, இந்தோனேசிய, மற்றும் முஸ்லிம் நாடுகளில் தூதர்கள்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன், பொதுச் செயலாளர் ஸாதிக் சிஹான், தேசிய அமைப்பாளர் இர்ஷாத் காதர், துணைத் தலைவர் ரிப்தி அலி, தூதரக பிரதானிகள், நீதிபதிகள், வர்த்தக மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரையும் உயர் ஸ்தானிகர் வரவேற்றிருந்தார். தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள் , ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தார்கள்.







(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)