பாகிஸ்தான், இலங்கை உறவின் 75 ஆண்டு நிறைவு; நினைவு முத்திரைகளை கூட்டாக வெளியிட ஒப்பந்தம் கைச்சாத்து
பாகிஸ்தான் – இலங்கை இரு நாட்டு உறவின் 75 வது ஆண்டை குறிக்கும் வகையில் நினைவு முத்திரைகளை கூட்டாக வெளியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025 மார்ச் 5ம் திகதி அன்று பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாகிஸ்தான் அஞ்சல் துறைக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அஞ்சல் துறைக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ் மற்றும் இலங்கை தபால் திணைக்கள தலைமை அஞ்சல் அதிகாரி திரு. எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் நடைபெற்றது.



(அஷ்ரப் ஏ சமட்)