குடிகாரர்களின் போலியான நடிப்புக்களை நாம் இனியும் அனுமதிக்க மாட்டோம்.மகளிர் தின நிகழ்வில் பெண்கள் போர்க்கொடி
சாராயம் குடித்துவிட்டு செய்யும் போலியான நடிப்புக்கலை பெண்கள் நாம் இனியும் அனுமதிக்கப் போவதில்லை ஒன்று கூடுவோம் மாற்றியமைப்போம் என சர்வதேச மகளிர் தின மார்ச் 8 விழாவில் 24 மாவட்டங்களிலும் பெண்கள் ஒன்றுகூட உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தில் (ADIC) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந் நிறுவனத்தின் பிரதிநிதி எம்.நிதர்சனி தெரிவித்தார்
கொழும்பு 5ல் உள்ள மதுசார தகவல் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையில் மதுசார பாவனையின் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி தகவல் தருகையில் நிதர்சனி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தகவல் தருகையில் இலங்கையில் 2022ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு மதுசாரம் மற்றும் புகைத்தல் பாவனைக்காக தினமும் ருபா 121 கோடி ருபா செலவிடுகின்றனர், 2022 ல் மதுசார வரி வருமானம் மற்றும் மதுசார பாவனையினால் ஏற்படும் பொருளாதார மற்றும் சுகாதார செலவினம் ரூபா 237 பில்லியன்களாகும். மேலும் 2023ஆம் ஆண்டு மதுசாரத்திற்கான வரியை 20 வீதத்தால் அதிகாரிததமையினால் நாட்டின் மதுசார வரி வருமானம் ருபா 11.6 பில்லியன்கள் அதிகரிப்பதுடன் மதுசார பாவனை 8.3 மில்லியன் லீற்றர் கள் குறைவடைந்துள்ளது.கடந்த அரசாங்கத்தில் 323 மதுசார விற்பனைக் கோட்டா ஹலால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான மதுசார நிலையங்கள் உள்ளன.
மதுசார பாவனை காரணமாக ஒரு நாளைக்கு எமது நாட்டில் 40 – 45 பேர் அநியாயமாக பலியாகின்றனர் (வருடத்திற்கு 15000 பேர்) பியர் மற்றும் சாராய கம்பெனிகள் ஒரு நாளைக்கு 60 கோடி வருமான மீட்கின்றனர். இந்தக் தொகையை நாளாந்தம் ஈட்டிக் கொள்வதற்காக உங்களது பிள்ளைகளும் இலக்காகும். இவற்றுக்கு உதாரணம் பாடசாலை களுக்கிடையே நடைபெறுகின்ற பிக் மெச் விளையாட்டாகும். இதிலிருந்து மாணவர்கள் பியர் குடிவகைகள் அருந்தப் பழகுகின்றனர்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் விரும்புகின்ற நடிகர் நடிகைகள் மதுசாரம் அருந்துவதற்காக சினிமாவில் காட்டுகின்றனர். சமூக ஊடகங்களில் பிரச்சாரங்களும் அறிவித்தல்களும் வெளியிடுகின்றனர். சிறிய பிள்ளைகள் பார்க்கின்ற கார்ட்டூன்களில் கூட மதுசார பாவனைக்கான பிரச்சாரங்களுக்கு சந்தர்ப்பங்கள். தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படங்களில் மதுசார பாவனையை கவர்ச்சிகரமாக காட்டுதல். மதுசார பாவனையில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்கின்றனர் .
கவலை ஒன்று பிரச்சினை ஒன்று ஏற்படுகின்றபோது சாராயம் அல்லது பியர் குடிப்பதன் காட்டுவது ஒருவர் உபசாரத்தில் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் பியர் உடைத்து சியர் செய்வது தற்காலத்தில் பெண்களும் மதுசார பாவிப்பதாக காண்பித்தல். போன்ற பல்வேறு நிகழ்வுகள் மதுசாரத்தை ஊக்குவிக்கின்றன. என பல்வேறு தரவுகளுடன் மதுசார தகவல் நிலையத்தின் பிரதிநிதி விளக்கமளித்தார்.

(அஷ்ரப் ஏ சமத்)