ரெயிலில் மோதி காட்டு யானை படுகாயம்
லன்னறுவை மனம்பிட்டி பகுதியில் இன்று (03) ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று படுகாயமடைந்துள்ளதாக மனம்பிட்டி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே குறித்த யானை படுகாயமடைந்துள்ளது.
25 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.
கிரித்தலை கால்நடை வைத்தியர் சமீர பளிங்கு ஆராச்சி தலைமையிலான குழுவினர் படுகாயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மனம்பிட்டி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)