முஸ்லிம் பிரதேசங்களின் தேவைகளை இனம் கண்டு அதனை நிறைவேற்றிக் கொடுங்கள்.பிரதியமைச்சர் முனீருக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அத்ஹம் கடிதம்.
உக்குவளை நிருபர்
பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் தேவைகளை இனம்கண்டு அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க பிரதியமைச்சர் அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டுமென முன்னாள் மத்திய மாகாணசபை ஸ்ரீ.ல.மு.கா.உறுப்பினரும் மாத்தளை மாநகரசபை பிரதி முதல்வருமான அஸ்ரப் பவுண்டேசன் அமைப்பாளருமான அல்ஹாஜ் ஐ. எம். அத்ஹம் ஜேபி.குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தேசிய நல்லிணக்கதுக்கான பிரதியமமைச்சர் அல்ஹாஜ் முனீர் முளப்பருக்கு எழுதியனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது.
கடந்த பொதுத் தேர்தலின்போது ஜேவிபி , என்பிபி யை வெற்றிபெறச் செய்தலில் பல பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் அதிலும் குறிப்பாக இவ்வெற்றிக்காக முஸ்லிம்கள் நோன்பு நோற்றியதாகவும் அறியமுடிந்ததுடன் இதனை குறிப்பிட்ட அமைச்சர்களும் பகிரங்கப்படுத்தியுமுள்ளனர் இந்நிலையில் தாங்கள் இந்த அரசின் தேசிய நல்லிணக்கத்துக்கான பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதுகுறித்து நானும் ஒரு அரசியல்வாதியாகச் செயற்பட்டவன் என்றவகையில் மகிழ்கிறேன் இவ்வேளை ஜேவிபி , என்பிபியின் எமது ஜனாதிபதியும் முஸ்லிம்கள்மீது அபிமானமும் அவர்களது தேவையுனர்ந்தவர் எனலாம்.
இந்நிலைமையில் சமீபத்தில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்தின் நிதிமூலம் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களது தேவைகளை இனம்கண்டு நிறைவைற்றிக்கொடுக்க தேசிய நல்லிணக்க பிரதியமைச்சராகிய தாங்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவருவதுடன் தாங்களும் இதுவிடயத்தில் கரிசனைகொள்ளுமாறு வேண்டிக்கொள்வதுடன் இதற்காக பிரதேசங்களின் அமைப்பாளர்கள்(இக்கட்சி) மற்றும் ஏனைய முக்கியஸ்த்தர்களுடன் கலந்துயையாடி அவர்களது ஒத்துழைப்புகளைப் பெறலாம் எனவும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.