மீண்டும் களத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்
சுபோதனி அறிக்கையின் பிரகாரம் அதிபர் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய 2/3 சம்பள நிலுவையை வழங்காமல் அரசாங்கம் தொடர்ந்து
ஆசிரிய சமூகத்தை ஏமாற்றி வருவதால் தொழிற் சங்கப்
போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இதற்கு முன்னோடியாக முக்கியமான கலந்துரையாடல்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களை அறிவுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருவதாகவும் இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் தலைவர்
பிரியந்த பிரனாந்து
ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.