முகத்துவாரத்தில் 17 வருடங்களின் பின் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படும் பாலர் பாடசாலை
கற்பிட்டி முகத்துவாரத்தின் கிராம உத்தியோகத்தர் எம். பீ.எம் அர்ஷதின் அயாராத முயற்சியின் பயனாக கடந்த 17 வருடங்களாக நடைபெறாது மூடப்பட்டிருந்த பாலர் பாடசாலை புதன்கிழமை (05) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது .
கற்பிட்டி முகத்துவாரம் பாலர் பாடசாலையின் உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு முகத்துவாரம் கிராம உத்தியோகத்தர் எம் பீ எம் அர்ஷதின் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச செயலாளராக பதில் கடமையாற்றும் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் நிர்வாக கிராம உத்தியோகத்தர் பீ.எம்.எம் பைனஸ், பிரதேச செயலகத்தின் கள உத்தியோகத்தர்கள், முகத்துவாரம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம் ஸாகீர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், முகத்துவாரம் அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர், முகத்துவாரம் சிங்கள பாலர் பாடசாலையின் ஆசிரியர், முகத்துவாரம் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் புதிய பாலர் பாடசாலையின் ஆசிரியராக எம்.ஆர்.எப் நுஸ்ரா கடமையாற்ற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)