கந்துரட்ட சேவை ஏற்பாட்டில் அறிவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு
இலங்கை வானொலியின் கந்துரட்ட(கண்டி) ஒலிபரப்பின் மூன்றுமொழி சேவைகளின் ஏற்பாட்டில் முதன்முதலாக இளம் ஆண், பெண் அறிவிப்பாளர்களுக்கான தமிழிலிலான அறிவிப்புத்துறை பயிற்சி செயலமர்வுகள் சமீபத்தில் கந்துரட்ட நிலைய அரங்கில் நடைபெற்றது.
இந்நிலைய பிரதி பணிப்பாளர் நஜித் ஜயசூரிய வின் தலைமையிலும் ஆலோசனையில் நடாத்தப்பட்ட இச் செயலமர்வின் போது இலங்கை வானொலி நிலைய தலைவர் பேராசிரியர் உஜித கயாசான், பணிப்பாளர் தம்மிக்க குமார ஆகியோர் இந்நிகழ்வுக்கு சமூகமளித்திருந்ததுடன் கந்துரட்ட முஸ்லிம் சேவை பொறுப்பாளர் எம்.ரலீமின் பங்களிப்புடன் ,கந்துரட்ட நிலைய தொழில்நுட்ப ஆதிகாரி தம்மிக்க தனசேக்கர ஆகியோரும் இணைந்த இச்செயலமர்வுகள் நடாத்தப்பட்டன.
இங்கு இடம்பெற்ற மூன்று செயலமர்வுகளும் முறையே கொழும்பு முஸ்லிம் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இஸ்பஹான் சாப்தீன், கந்துரட்ட முஸ்லிம் சேவை அறிவிப்பாளர் எம். முனாஸ் , அறிவிப்பாளர் திருமதி சாஹிரா ஆகியோரால் சிறப்புற நடாத்தப்பட்டதுடன் இச்செயலமர்வில் பல இடங்களிலிருந்தும் இளம் ஆண், பெண் அறிவிப்பிளர்களர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.



(உக்குவளை நிருபர்)