வாக்காளர் பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்; முஸ்லீம் லீக் வாலிப முன்னணி வேண்டுகோள்
2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவில் உங்களது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
இப்பொழுதே தேர்தல் ஆணைக்குழு வாக்காளர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர்களை பதிவு செய்திருக்காவிட்டால் உங்கள் பிரதேச கிராம சேவகர்களுடன் தொடர்பு கொண்டு வாக்காளர் பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவர் ஷாம் நவாஸ் இது தொடர்பாக விடுத்துள்ள வேண்டுகோளில் தேர்தல் ஆணையகத்தின் தகவல்களின்படி இவ்வாரம் வீட்டுக்கு வீடாக கிராம உத்தியோகத்தர்கள் வர மாட்டார்கள். ஏற்கனவே பதிவாகாமல் இருக்கின்ற பெயர்களை சேர்த்துக் கொள்வார்கள். புதிதாக பெயர்கள் இருப்பின் உங்களது பகுதி கிராம சேவகர்களுடன் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும், வாக்காளர் இடாப்புகளை பதிவு செய்வதில் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.