மதுரங்குளி மீடியாவின் பரிசளிப்பு விழாவில் ஊடகவியலாளர்களான சனூன் மற்றும் சியாஜ் விருது வழங்கி கௌரவிப்பு
புத்தளம் மதுரங்குளியிலிருந்து கடந்த 08 வருடங்களாக இணையதளம் ஊடாக தமிழ் பேசும் சமுகத்தின் குரலாக சமூக மாற்றத்தை நோக்கிய ஊடக பயணத்தை. மேற்கொண்டு வரும் மதுரங்குளி மீடியா 2025 ம் ஆண்டின் பரிசளிப்பு விழாவையும் கௌரவிப்பு நிகழ்வையும் வெள்ளிக்கிழமை (28) மதுரங்குளி டீரீம் மண்டபத்தில் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் என்.எம் எம் நஜீப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது புத்தளத்தில் கடந்த 43 வருடங்களாக பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாளராகவும் சமூக சேவையாளராகவும் மக்கள் பணி செய்து வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாதீனீ எம் யூ.எம் சனூன் மற்றும் கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களாக பல்வேறு பத்திரிகைகளிலும் செய்தியாளராகவும் கற்பிட்டியின் இருந்தது வெளிவந்த முதல் பத்திரிகையான அரவம் பத்திரிகையின் ஆசிரியர் பீட உறுப்பினராகவும், கற்பிட்டியின் முதலாவது மின்னிதழ் பத்திரிகையான கருப்புவெள்ளையின் பிரதம ஆசிரியராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றி வரும் ஸ்ரீ விக்ரமகீர்த்தி எம் எச் எம் சியாஜ் ஆகிய இருவரையும் பாராட்டி கௌரவித்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கற்பிட்டி பிரதேச சபைஉறுப்பினர் கே.எம்.எம் பைசர் மரைக்காரின் அழைப்பின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)