உள்நாடு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இரத்தினபுரியில் நடாத்திய பாகிஸ்தான் பெட்மின்டன் சம்பியன்ஷிப் 2025

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் பெட்மின்டன் சம்பியன்ஷிப் 2025 ஐ 2025 பெப்ரவரி 21 முதல் 23 வரை இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ உள்ளக விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்தது. கடந்த ஆண்டு வெற்றிகரமான போட்டியின் தொடர்ச்சியாக இந்த சாம்பியன்ஷிப் ஏற்பாடு செய்யப்பட்டது.

15 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 40 உள்ளூர் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

பாகிஸ்தான் பிரதி உயர் ஸ்தானிகர் திரு வாஜித் ஹசன் ஹஷ்மி அவர்கள் விருது வழங்கும் விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு இறுதிப் போட்டிகள் மற்றும் தகுதிச் சுற்றுகளில் வெற்றி அடைந்தவர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார். பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக மற்றும் கலாச்சார செயலாளர் திரு அதில் சத்தார் மற்றும் இரண்டாவது செயலாளர் திரு இப்திகார் ஹுசைன் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது உரையாற்றிய பிரதி உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவையும் தொடர்பையும் இணைப்பதில் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர் பாகிஸ்தானும் இலங்கையும் நெருங்கிய உறவைப் பேணி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் அடிமட்ட அளவில் இருதரப்பு நட்புறவுக்கு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

பிரதி உயர்ஸ்தானிகர் வீரர்களுக்கு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களையும் வழங்கி வைத்ததோடு வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு கணினிகளையும் வழங்கி வைத்தார். பாகிஸ்தான் பெட்மிண்டன் போட்டி 2025 ஐ சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களுக்கும் பிரதி உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *