க்ளீன் சிறீலங்கா திட்டத்தின் கீழ் வட மத்திய ஆளுனர் தலைமையில் கும்பிச்சாண்குள அபிவிருத்தி
க்ளீன் சீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனுராதபுரம் மாநகர சபையினால் பராமரிக்கப்படும் கும்பிச்சான்குளம் குள பகுதியை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தினை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் அதிகமான சுற்றுலாத்தளங்களை உருவாக்கி அதிக சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதே இதன் நோக்கமாகும்.
தொட்டி அமைப்பின் மூலம் மக்களின் சமூக பொருளாதார நிலையை வலுப்படுத்துவதும் நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதும் மற்றுமொரு நோக்கமாகும்.
இதற்கு நெதர்லாந்தின் இலங்கை பராமரிப்பு நிறுவனம் நிதியுதவி வழங்குவதுடன் ஷ்ரம சக்தி அறக்கட்டளை எஸ். ஓ.எஸ் . தேசிய மக்கள் சக்தியின் சிறுவர் கிராமம் கும்பிச்சாங்குளம் பிரிவு உள்ளிட்ட அமைப்புக்கள் ஆதரவு அளித்து வருகின்றன.
இதன் போது ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆனந்த ரத்நாயக்க அமைச்சர் வசந்த சமரசிங்க வின் ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க மாகாண ஆணையாளர் என்.ஏச்.ராய் நிஷாந்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)