வாழைச்சேனை ஆயிஷாவில் ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்வு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் புனித ரமழானை வரவேற்போம் எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சியொன்று (27) வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் என்.சஹாப்தீன் அவர்களின் தலைமையில் கலாசாரக் குழு பொறுப்பாசிரியர் எம்.எம்.எம்.அஸ்மின் சிறாஜி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் ஆசிரியர் எம்.எல்.எம்.இப்ராஹீம் மதனி கலந்து கொண்டு நோன்பின் மகிமை, ரமழான் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நல்லமல்கள் பற்றி சொற்பொழிவாற்றினார்.
இந்நிகழ்வின்போது ரமழான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்கிய மாணவிகளுக்கு சினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


(எச்.எம்.எம்.பர்ஸான்)