8 கிராமங்களை ஒன்றிணைத்து “அழகிய கிராமம்” என்ற தொனியில் வேலைத் திட்டங்கள்; MUSLIM Aid அமைப்பு திட்டம்
அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதியில் எட்டூர் கிராமங்களை ஒன்றிணைத்து அழகிய கிராமம் என்ற தொனிப்பொருளில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு ம Muslim Aid நிறுவனத்தின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனடிப்படையில் கல்வித்திறன் மற்றும் விளையாட்டு, தொழில் முனைவு, ஆரோக்கியமும் சிறந்த சுகாதாரம் மற்றும் சக்காத் சதகா மற்றும் நிதி முகாமைத்துவம் என்ற அடிப்படையில் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான ஆலோசனை அங்குரார்ப்பன கூட்டம் கோவில்பந்தாவ சமுர்த்தி அபிவிருத்தி அலுவலக மண்டபத்தில் (28) நடைபெற்றது.
இதன்போது Muslim Aid நிறுவனத்தின் பிரதிநிதி எம்.ரீ.எம்.பஸ்லான் (HOP) நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
குறித்த செயற்திட்டத்தின் ஊடாக வாழ்வாதார சுயதொழில் ஊக்குவிப்பு, கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் , விளையாட்டு துறையை விருத்தி செய்தல் , சுகாதார துறை சார்ந்த விழுமியங்களை முன்னெடுத்துச் செல்லல் , சக்காத் சதகா மற்றும் நிதி முகாமைத்துவம் போன்றவைகளை திட்டமிட்டு செயல்படுத்துதல் போன்ற செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த செயற்திட்டம் முதற் கட்டமாக கோவில்பந்தாவ மற்றும் இஹலகொட்டியாவ ஆகிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு வாழும் மக்களின் சுய தரவுகள் சேகரிக்கப்பட்டு செயற்திட்டத்தினை மேற்கொள்ள கலந்தாலொசிக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராம மட்டத்தில் குழுவினை நியமித்து வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனை வழங்கட்டுள்ளது.
இதன் போது அப்துல் ஜப்பார் பைஷல் (காஷிமி ) Muslim Aid நிறுவனத்தின் அங்கத்தவர்களான எம்.ஏ.ஹக்கீம் எம்.ஐ.எம்.இக்ராம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)