மூதூர் டெஸ்லா கல்வி நிறுவனத்தின் வருடாந்த மாணவர் கெளரவிப்பு
மூதூர் டெஸ்லா கல்வி நிறவனத்தில் தரம் 2 மற்றும் 3 மாணவர்களுக்கான வருடாந்த மாணவர் கெளரவிப்பும் பெற்றோர் சந்திப்பும் வெள்ளிக்கிழமை (28) 3 சீ.டி முனீர் ஞாபகார்த்த மண்டபத்தில் நிறுவனத்தின் பணிப்பாளர் நியாஸ் ஆஷா பலீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக இலக்கிய செயற்பாட்டாளர் கதிர் திருச்செல்வம், திருகோணமலை மாவட்ட முன்பள்ளி பணிப்பாளர் எஸ்.மஜுன் மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் எஸ்.கோணேஷ்பரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிக்கான நினைவுச் சின்னங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு நிகழ்வுக்கு மூதூர் ஜே.எய்.ஐ நிறுவனம் பூரண அனுசரணை வழங்கிமையை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)