மிணுவன்கொட அல் அமானில் ரமழானை வரவேற்போம் மற்றும் ரமழான் பரிசளிப்பு நிகழ்வு
புனித ரமழான் மாதத்தினை வரவேற்கின்ற நிகழ்வும், கடந்த ரமழான் மாதத்தினை முன்னிட்டு இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்குமான பரிசளிப்பு நிகழ்வும் நேற்று 27.02.2025 வியாழக்கிழமை மிணுவன்கொடை அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் உம்மு ஹபீபா கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கடந்த ரமழானில் அதிகம் அல்குர்ஆன் ஓதிய மாணவர்களுக்கும், வினா விடை நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதன. இன்னும் எதிர் நோக்கும் ரமழானை காத்திரமான பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான ஆண்மீகம் மற்றும் அறிவு சார்ந்த வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் ஆஸிம் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அல்ஹாஜ் இக்பால் (முப்தி), விசேட பேச்சாளராக மத்திய அஹதிய்யா சம்மேளன பிரதித் தலைவர் ஆஷிக் அக்ரம் ஜுனைட், அனுசரணையாளர் ஜெஸ்மி மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.













(உபைதுல்லாஹ்- மிணுவன்கொடை)