உள்நாடு

ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். எம்.எஸ்.உதுமாலெப்பை

இயற்கையாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

நீதியமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை
அண்மையில் வழங்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் சிரேஷ்டமானவர்கள் தகுதிப் பட்டியலில் இருக்கத்தக்கவாறு கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே நீதியரசர்களின் நியமனங்கள் சுதந்திரமாக நடைபெற வேண்டும். கடந்த ஆட்சிக் காலங்களில் நீதித்துறையில் நீதியாக செயற்படவில்லை என்பதனால் தான் மக்கள் அவர்களை புறந்தள்ளி உள்ளார்கள். புதிய மாற்றங்களை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்த நீங்களும் கடந்த ஆட்சியாளர்களைப் போல் செயற்படக் கூடாது என நீதியமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நீதியமைச்சர் ஹர்க்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற போது அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட பின் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள் கருத்து தெரிவிக்கையில்….

நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் தொடர்பில் பல விமர்சனங்கள் செய்யப்பட்ட போதும் நீதியமைச்சு அந்த விடயத்தில் தலையிடவில்லை எனவும், நீதிச்சேவை ஆணைக்குழு நியமனங்களை வழங்கியதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். எது எப்படியிருந்தாலும் எதிர்காலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் வழங்கும் போது நீதியாக செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

நீதியமைச்சின் செயலாளரினால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் நமது நாட்டில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாகக் கடமை புரியும் அனைத்து மரண விசாரணை அதிகாரிகளுக்கும் முஸ்லிம்களின் மரணம் தொடர்பான கடமைகளை நிறைவேற்றும் போது முஸ்லிம்களின் மரணம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அவர்களின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டும் இயற்கையாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை மூன்று நான்கு நாட்களுக்கு மேல் விடுவிக்காமல் இழுத்தடிப்பு செய்யப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் எமது மக்கள் பாரிய கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர்.

எனவே நீதியமைச்சினால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய இயற்கையாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை 24 மணித்தியாலத்திற்குள் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை நீதியமைச்சு முன்னெடுக்க வேண்டும் எனவும் மேற்படி சுற்றுநிரூபத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு நீதியமைச்சின் செயலாளரினால் 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான சுற்றுநிரூபத்தை நீதியமைச்சின் செயலாளர் அமுல்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானது எனவும், நமது நாட்டிலே இனங்களுக்கு இடையில் ஒற்றுமையினை ஏற்படுத்துவதுடன் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் குறிப்பாக ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை அமுல்படுத்தும் ஆணைக்குழுவில் இதுவரையும் இரண்டு தமிழர்களும், ஒரு முஸ்லிமும் இணைத்துக் கொள்ளப்படாத நிலமை தொடர்கின்றது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நான் இரண்டு தடவைகள் கோரிக்கை விடுத்த போதும் இதற்கான உரிய பதில் அமைச்சரினாலோ பிரதி அமைச்சரினாலோ வழங்கப்படவில்லை.

எனவே இந்த க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஆணைக்குழுவில் ஒரு முஸ்லிம் ஒரு தமிழர் அதேபோன்று ஒரு மலையகத்தைச் சேர்ந்தவரையும் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினராக இணைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு இது தொடர்பான பதிலை பிரதி அமைச்சர் முனீர் முழாபீர் மௌலவி அவர்கள் பதிலளிக்குமாறு நீதியமைச்சர் வேண்டிக்கொண்டார்.

இது தொடர்பாக பதிலளித்த பிரதி அமைச்சர் முனீர் முழாபீர் மௌலவி க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் எங்களுடைய அமைச்சின் கீழ் அமுல்படுத்தப்படவில்லை என்றும், இது ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்

ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். எம்.எஸ்.உதுமாலெப்பை

கே எ ஹமீட்

இது தொடர்பாக பதிலளித்த பிரதி அமைச்சர் முனீர் முழாபீர் மௌலவி க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் எங்களுடைய அமைச்சின் கீழ் அமுல்படுத்தப்படவில்லை என்றும், இது ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

(கே.ஏ.ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *