கண்டி உடுதெனியவில் கொலை, கொள்ளை சம்பவம் ; சந்தேக நபர்கள் கைது.

அண்மையில் கண்டி உடுதெனிய வில் வீடொன்றிற்குள் புகுந்து 70 வயதுடைய சித்தி ஆபிதா என்ற 5 பிள்ளைகளின் தாயை மூச்சுத் திணற வைத்து கொலைசெய்து அந்த வீட்டிலிருந்து தங்கம் மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்கள் கண்டியைச் சேர்ந்த தலாத்துஒய பொலீஸாரின் வலையில் சிக்கியுள்ளனர்.
சந்தேகநபர்கள் 34, 36 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் அக்குறணை- மல்வானஹின்ன, மடவளை- கல்கெடியாவத்தை , மற்றும் உக்குவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் உக்குவளையைச் சேர்ந்த ஒருவர் தலை மறைவாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கொள்ளையிடப்பட்ட தங்கப் பொருட்களில் ஒரு பகுதி உக்குவலளையில் தங்கப் பொருட்கள் கொள்வனவு செய்யும் இடத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது..
(ரஷீத் எம். றியாழ்)