நீர்கொழும்பு மாதர் சங்கத்தின் வருடாந்த கண்காட்சி
நீர்கொழும்பு முஸ்லிம் மாதர் சங்கத்தின் வருடாந்த கண்காட்சி கடந்த 22 2.2025 அன்று நீர் கொழும்பு சவுண்டஸ் பிளேஸில் உள்ள திருமண அரங்கில் நடைபெற்றது.
நீர்கொழும்புப் பிரதேச மகளிர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் கேக், தையல், ஆடை அலங்காரம், மருதோன்றி மற்றும் அரபு எழுத்தணி ஆகிய பிரிவுகளுக்கான கண்காட்சிகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் செயலாளர் திருமதி ரசிக்க மல்ல வாரச்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக நீர்கொழும்பு அல்- அஸ்ஹர் பாலர் பாடசாலை அதிபர் மசாகிமா பாரூக். டீன்ஸ் கேக் அகடமி பணிப்பாளர் திருமதி நெலுபா அமிர்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டாக்டர் பெனாசீர் மற்றும் திருமதி ரிக்கா ஹாரிஸ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினார்கள்.
நீர்கொழும்பு முஸ்லிம் மாதர் சங்கத்தின் தலைவி திருமதி எஃப். ஆர். ஹலால்தீன் சிறப்புரை ஆற்றினார்.
கண்காட்சியில் திறமைகளை வெளிக்காட்டிய போட்டியாளர்களுக்கு வெற்றி கிண்ணங்கள். பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



