பட்ஜெட் – 2025; குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.
குழுநிலை விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வரவு செலவுத் தலைப்புகள் உட்பட நிதி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் தலைப்புகள் மீதான விவாதமும் நடைபெற உள்ளது.
குழுநிலை விவாதம் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.