உள்நாடு

சாய்ந்தமருது அல்ஹிலால் இல்ல விளையாட்டுப் போட்டி; வெற்றிவாகை சூடியது கஸ்மன் இல்லம்

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) சாய்ந்தமருது பொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் சிறப்பாக விளையாடியதோடு மட்டுமல்லாமல், இயற்கை முறையில் இல்லத்தை யும் அமைத்து முதலாம் இடத்தை தனதாக்கிய கஸ்மன் இல்லம் (பச்சை) 226 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது.

இரண்டாமிடத்தை 200 புள்ளிகளைப் பெற்று ரையான் இல்லம் (நீலம்) பெற்றுக் கொண்டதோடு, 191 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடம்தை சலா இல்லம் (மஞ்சள்) பெற்றுக் கொண்டது.

இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகவும்
அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் உடற்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ்,
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ்
ஆகியோர் விசேட அதிதிகளாகவும் அத்துடன் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், பாலர் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஜஹாங்கிர், ஈ.பி.எஸ்.ஐ. இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான எஸ்.எம்.எம். அன்ஸார் ஆகியோர் நிகழ்வில் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இம்முறை மற்றும் இதர பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையில் பல வருட காலமாக நடை பெறாமல் இருந்த இந்த இல்ல விளையாட்டுப்போட்டியானது இம்முறை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *