மெளலவியைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கவும்; அ.இ.ஜம்மியதுல் உலமா வேண்டுகோள்
அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசத்தில் மௌலவி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பிலான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
குறித்த மௌலவி மீது நிகழ்த்தப்பட்ட அத்துமீறிய செயற்பாட்டினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மிக வன்மையாக கண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட மௌலவிக்கு மிகத் துரிதமாக நீதியினை பெற்றுக் கொடுக்குமாறும், தாக்குதல் நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுக்கிறது.