புத்தளம் றத்மல்யாய அஹதிய்யாவின் வருட பூர்த்தியும் கலை நிகழ்வும்
புத்தளம் றத்மல்யாய அல் ஹாஸிமி அஹதிய்யா பாடசாலையின் இரண்டாவது வருட நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற மாணவர்களின்
இஸ்லாமிய கலைநிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் புதன்கிழமை (26)அல் ஹாஸிமி அஹதிய்யாவின் தலைவர் அல் ஹாபிழ் அஷ்ஷெய்க் ஏ.ஜீ.எம்.அஸீம் தலைமையில் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஏ.ஹாதி மற்றும் நிர்வாகக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக தொழிலதிபரும் சிட்டி கிளாஸ் சென்டர் முகாமையாளருமான என்.எம்.ஸியாதின் துணைவியார் திருமதி ஸியாத், கெளரவ அதிதிகளாக அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளன தேசிய பிரதித் தலைவர் பாரூக்பதீன் (ஆசிரியர்), றிஸாட் பதியுதீன் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஏ.எம்.பெளஸீன் , அல் ஹாஸிம் சிட்டி ஜும்ஆப் மஸ்ஜிதின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஜெஸ்மி, நூராணியா ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவர் ஏ.ஆர்.றஸ்மின், மஸ்ஜிதுஸ் ஸலாம் தலைவர் கே.எம்.கே.ஸுபைர் ஆகியோரும் சிறப்பதிதிகளாக முன்னாள் அதிபர் எம்.எம்.நஜ்மி அஸ் ஸபா நிறுவன தலைவி
ஸிபானி ஸஜாத், மெளலவியா அன்வரா றிபாய், அஷ்ஷெய்க் எஸ்.எம்.றகீப், எச்.என்.ஹன்ஸாத், ஸுஜானா, ஏ.எஸ்.ஏ.றிஸான், ஏ.சீ.எம்.சவ்பான், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் முன்னாள் அதிபர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள்,மாணவர்கள்,நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டதாக அல்ஹாஸிமி அஹதிய்யா பாடசாலையின் ஊடகப் பொறுப்பாளரும், பொருளாளருமான திருமதி
ஷிபானி ஸஜாத்
தெரிவித்தார்.





(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)