புத்தளத்தில் மு.கா உறுப்பினர்கள், போராளிகளுடன் கலந்துரையாடிய றவூப் ஹக்கீம்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்மந்தமாக விஷேட கலந்துரையாடல் ஒன்று சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமின் பங்குபற்றுதலுடன் புத்தளம் றனீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதில் புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், போராளிகள் என சகல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முக்கிய விடயமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சியுடன் கூட்டணி சேர்வதா அல்லது மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதா என்பது பற்றியே கலந்துரையாடப் பட்டதுடன் மேலும் புத்தளத்தின் மூத்த போராளியும் கட்சியின் அமைப்பாளருமான மர்ஹூம் பாயிஸின் மரைவிற்கு பின்னர் இதுவரையும் அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது பற்றிய கேள்வி கட்சி போராளால் தலைவரிடம் முன்வைக்கப்பட்டது . இது விடயமாக கட்சியின் உயர்பீடம் கூடி விரைவாக நல்லதோர் தலைமைத்துவத்தை புத்தளத்திற்கு பெற்றுதரும் எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்தா? கூட்டாகவா? போட்டியிடுவது பற்றிய இறுதித் தீர்மானம் கட்சியின் உயர்பீடத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


(கற்பிட்டி செய்தியாளர் எம்.எச்.எம் சி்யாஜ்)