பரகா அமைப்பின் அனுசரணையில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
புனித ரமழானை முன்னிட்டு வறிய விதவைத் தாய்மார்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
இலங்கை பரக்கா சமூகநல அமைப்பின் அனுசரணையுடன் பெண்கள் வலுவூட்டல் அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு வறிய விதவைத் தாய்மார்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கட்டுகஸ்தோட்டை சாஹிரா விளையாட்டு மைதானத்தில் தலைவி பாத்திமா ரியாஸா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பரக்கா சமூகநல அமைப்பின் தலைவர் முஹமட் அமீன் முஹமட் முஜீப் அவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
கட்டுகஸ்தோட்டை புறநகரிலுள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத்தினர்கள் இந்த உலருணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதன் போது அரசி, பால், மா, பருப்பு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ரூபா 5000 பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.





(இக்பால் அலி)