பலகத்துறை சாதனையாளர்களுக்குகௌரவம்!
பலகத்துறை மண்ணில் பிறந்து பல துறைகளிலும் திறமை காட்டும் சாதனையாளர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வைபவம் கடந்த 23.02 . 2025 அன்று. போருத்தொட்ட அல்-பலாஹ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
போருத்தொட்ட சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் அப்துல் அஸீஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடந்த இந்த வைபவத்தில் டாக்டர் சப்னி அஜ்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வரை கௌரவிக்கப்பட்டார்கள்.
மத்ரஸாக்களில் மௌலவிப் பட்டம் பெற்றவர்களும் ஹாபிழ்களும் கௌரவிக்கப்பட்டார்கள். ஊடகத்துறையில் நான்கு தசாப்தங்கள் சிறப்பாக பணியாற்றிய எம். ஜே. எம். தாஜுதீன் அவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அல் -ஜென்னா விசேட தேவையுடையோ நிலையத்தின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

