குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவைத் தெரிவிக்க, தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் ஒரு பெரிய கூட்டமாக மக்கள் வருகை தந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பலர் யூடியூப் சேனல் வைத்திருக்கும் லாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்துள்ளனர்.