மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
நாளை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி வியாழக்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கான கற்றல் நடவடிக்கைகள் பிறிதொரு நாளில் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.