ஞானசார தேரருக்கு பிணை
முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரரின் சட்டத்தரணிகளின் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.