ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகியுள்ளது..!
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீல.மு.கா. கட்சி போட்டியிடுவது தொடர் பான கலந்துரையாடல் சனிக்கிழமை (11) மாலை அட்டாளைச்சேனையில் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு கூறினார்.
உதுமாலெப்பை எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக எதிர்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றோம்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீல.மு.கா. கட்சி சில மாவட்டங்களில் மரச்சின்னத்திலும் சில மாவட்டங்களில் கூட்டுச்சேர்ந்தும் போட்டியிடவுள்ளது.அனால் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளது .
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதன் மூலம்தான் எமது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். இக் காலகட்டம் முஸ்லிம்களுக்கு முக்கியமானதாகும். பிரிந்து நிற்கின்ற முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும்.
நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர் பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடம் ஸ்ரீல.மு.கா. கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.
நாம் புதிய யுகத்துக்கான அரசியலை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
முஸ்லிம்களின் அரசியல் உரிமைக்காக மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஏனைய சமூகத்தினருக்காகவும் குரல் கொடுத்து வருகின்றது என்றார்.
(கே எ ஹமீட்)