நாளை சி.ஐ.டி யில் ஆஜராகுமாறு நாமலுக்கு அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை நாளை (26) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக நாமல் ராஜபக்ச இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.