நீர் விநியோகத்திற்கான தாரிக் ஹமீதின் நிதி உதவி
தெல்தோட்டை, முஸ்லிம் கொலனி இலாஹியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையினால் நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, அந்த நீர் விநியோகத் திட்டத்தை விஸ்தரிப்பதற்கும் அழகிய முறையில் செய்வதற்கும் பல்ளேகமையைச் சேர்ந்த தேச கீர்த்தி ,தேசபந்து ஏ. ஆர் .ஏ. ஹமீத் முயற்சியில் தாரிக் ஹமீத் (Qatar) 320 000/= ரூபாய் நிதி 17 .02. 2025 அன்று நிர்வாக சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாரிக் ஹமீத் மற்றுமொரு அன்பளிப்பாக தெல் தோட்டை அக்ஸா கொலனி, மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் இரண்டாம் மாடி நிர்மாணப் பணிகளுக்காக 2 லட்சம் ரூபா நிதியும் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வேளை திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் ஏ .ஆர். ஐ .யாகூப் (இஸ்லாஹி) கலந்து கொண்டார்.
தெல்தோட்டை பிரதேசத்தில் சமூக சேவையில் பல்வேறு வேலை திட்டங்களை தாரிக் ஹமீத் செய்து வருகின்றார்.