வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மாணவன் சாதனை..!
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஆலயம் ஆகியன இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ஆக்கபூர்வமான காணொளி தயாரிப்பு போட்டியில்
வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மாணவன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
தரம் 11ல் கல்வி கற்கும் அஹமட் றமீஸ் முஸ்ஹப் எனும் மாணவனே பாடசாலைக்கும் தனது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதமர் ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவருக்கான வெற்றிச் சான்றிதழை வழங்கி வைத்தார்.
வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்துவதுடன் வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை முதல்வர் எம்.பி.எம்.அன்வர் தெரிவித்தார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்.)
